உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் நேர கெடுபிடியை தவிர்க்க தி.மு.க., - அ.தி.மு.க., புது யுக்தி

தேர்தல் நேர கெடுபிடியை தவிர்க்க தி.மு.க., - அ.தி.மு.க., புது யுக்தி

பொதுத்தேர்தல் என்றாலும், இடைத்தேர்தல் என்றாலும் ஓட்டு போடுபவர்களுக்கு பரிசு பொருளை கொடுத்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகள் வந்து விட்டன. அதே போன்று வாக்காளர்களும் தங்களுக்கு பரிசு பொருட்கள் ஏதேனும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, எதிர் கட்சியினரின் கண்காணிப்பை மீறி பரிசு பொருட்களை தங்களின் ஆதரவாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.எனவே, பரிசு பொருட்களை கொடுப்பதை இப்போதே துவங்கி, நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் கொடுப்பவர்கள் இல்லை; எப்போதும் கொடுப்பவர்கள் என காட்டி கொள்வதில் அரசியல் கட்சிகள் போட்டி போட துவங்கி விட்டன. இதற்காக புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபை தொகுதியில், வரும் சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் சண்முகம் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் இந்த தொகுதி வி.ஐ.பி., அந்தந்தை பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மயிலம் தொகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பகுதியிலும் ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.இதுவரை நடந்த விழாக்களில் அந்தந்த கவுன்சிலர் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் இருந்து பெண்களை வரவழைக்கின்றனர். அவர்களுக்கு நலத்திட்டமாக தையல் இயந்திரம், காஸ் அடுப்பு, ஹாட்பாக்ஸ், சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களும், இளைஞர்களுக்கு கிரிக்கெட் தொகுப்பு என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 3 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.அ.தி.மு.க.,வின் இந்த அதிரடியால் ஆளும் கட்சியான தி.மு.க.,விலும் இப்போது மாற்றம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு முன் வரை ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் என்றால் அன்னதானம் அல்லது பிரட் வழங்கி வந்தனர். சமீப காலமாக இந்த பாணியை மாற்றியுள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தின் முடிவில் வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்களை வழங்க துவங்கியுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வின் போட்டியை சமாளிக்க பரிசு பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Keshavan.J
ஏப் 29, 2025 23:10

என்ன ஒரு புத்திசாலித்தனம் - இப்படிக்கு மைல்ச்சாமி


Sundar R
ஏப் 29, 2025 14:19

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓட்டுக்கு பணம், சாராயம், பிரியாணி மற்றும் பரிசுப்பொருட்களைக் கொடுப்பவர்களின் தலையை ஹெல்மெட்டால் அடிக்கப்போவதாக பணம் வாங்காமல் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமிழகமெங்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


நாஞ்சில் நாடோடி
ஏப் 29, 2025 13:31

மானத்தை விற்று இலவசத்துக்கு அடிமையானான் தமிழன் மற்றும் தமிழச்சிகள்...


உண்மை கசக்கும்
ஏப் 29, 2025 07:39

இப்படி இலவசத்தை நம்பி, இரண்டு மட்டைகளுக்கு வாக்களிக்கும் மக்கள், வெறும் சவம் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை