உதயநிதி வருகையையொட்டி தி.மு.க., ஆலோசனை கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில், நாளை(2ம் தேதி) நடைபெறும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கின்றார்.இதுகுறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 5, 6 ஆகிய தேதியில், அரசு சார்பில் நடக்க உள்ள ஆய்வு கூட்டம் மற்றும் தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்கிறார்.இதுதொடர்பாக திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டலில் நாளை (2ம் தேதி) காலை 10:00 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது.மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.