தி.மு.க., ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், மாநில மகளிர் பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, தேர்தல் பார்வையாளர் ஜெயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பக்தவத்சலு, ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், மும்மூர்த்தி, ராஜா, பிரபு, விசுவநாதன், ரவிதுரை, ரவி, ஜெயபால், லுாயிஸ், தீனதயாளன், முருகன், சடகோபான், கில்பர்ட்ராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, நயினா முகமது, கணேசன் உட்பட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.