உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் நகர பொறுப்பாளர்கள் சர்க்கரை, வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், ராஜா, கணேசன், செல்வமணி, சீனு செல்வரங்கம், சந்திரசேகர், மைதிலி ராஜேந்திரன், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் தி.மு.க., மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எப்படி எதிர்கொள்வது. மக்களுக்கு உதவுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ