உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மயிலம் : மயிலம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தீவனுாரில் நடந்தது.கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய சேர்மன்கள் யோகேஸ்வரி, அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.மயிலம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் துரை, இளவழுதி, செழியன், அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் சேகர், கண்ணன், பிரகாஷ், கவுன்சிலர் பரிதா சுல்தான், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ