உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மாவட்டத்தில் வார்டுகள், கிளைகள் வாரியாக, கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் துரை சரவணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், முரளி, கணேசன், சந்திரசேகர், ராஜா, மைதிலி ராஜேந்திரன், முருகேவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி