தி.மு.க., அரசின் 5ம் ஆண்டு துவக்க விழா இனிப்பு, துண்டு பிரசுரம் வழங்கி கொண்டாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் அரசின் 4 ஆண்டு சாதனை மற்றும் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. செஞ்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசின் 5ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு செஞ்சி கூட்ரோடு மற்றும் அப்பம்பட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி நகர செயலாளர் கார்த்திக், அப்பம்பட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., அரசின் சாதனைகளை விளக்கி பேசி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் துரை, நகர நிர்வாகிகள் நெடுஞ்செழியன், செயல்மணி, சங்கர், ஜான்பாஷா, பாஷா, சிவப்பிரகாசம், அய்யாதுரை அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டிவனம்
திண்டிவனம் நகர தி.மு.க., சார்பில் காந்தி சிலை அருகே தி.மு.க.,செயலாளர் கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன், வழக்கறிஞர் அசோகன், கவுன்சிலர்கள் பரணிதரன், சத்தீஷ், தில்ஷாத்பேகம், அயலக அணி முஸ்தபா, கொடியம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீவனுார்
மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தீவனுாரில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தி.மு.க.,செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சும்சுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜ்பரத், உமாஞானசேகர், சாந்தகுமார், நிர்வாகிகள் வழக்கறிஞர் கமலக்கண்ணன், சிவானந்தம், ராமமுனியாண்டி, பாஸ்கர், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள், மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், மும்மூர்த்தி, நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி சைபுல்லா, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, சாவித்திரி, மாநில மகளிரணி தேன்மொழி, இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சிவா, மாவட்ட பிரதிநிதி முரளி,அசோக் குமார், திலகர், சுதாகர், வெங்கடேசன் உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர். கண்டாச்சிபுரம்
முகையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ரவிக்குமார், கிளைசெயலாளர்கள் தேவசேனாதிபதி, ஏழுமலை,ஊராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். விநாயகம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அருணகிரி, நடராஜன், ஏழுமலை செல்லபெருமாள், சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முகையூர் ஒன்றிய நிர்வாகிகள் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் வரவேற்றனர். பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர். பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 4 ஆண்டு சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் செந்தில் முருகன், பாக்கியராஜ், சதாம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் நகர செயலாளர் செல்வம், நகர பொருளாளர் சையத் நாசர், சிறுபான்மை பிரிவு சுலைமான் உட்பட பலர் பங்கேற்றனர். அவலுார்பேட்டை
மேல்மலையனுார் ஒன்றியம் அவலுார்பேட்டை கடைவீதியில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அரசின் சாதனைகளை குறித்து பேசினார். முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல் வளத்தியிலும் இனிப்பு வழங்கப்பட்டது.