உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்: லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்: லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிபாளை யம், பூவரசங்குப்பம், வடவாம்பலம், சின்னக்கள்ளிப்பட்டு, வி.அகரம், புருஷானுார், ப.வில்லியனுார், பஞ்சமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் கள ஆய்வு செய்தார். டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, பூத் முகவர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று, உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய நிர்வாகிகள் அசோக்குமார், சரவணன், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமாரன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், ஒன்றிய மாணவணி அமைப்பாளர் மணிகண்டன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண், பிரகாஷ், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல், பிரேமா செல்வம், கிளை செயலாளர்கள், ஓட்டுசாவடி டிஜிட்டல் ஏஜென்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !