உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை களப்பணி: எம்.எல்.ஏ., ஆய்வு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை களப்பணி: எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம்; விழுப்புரம், பானாம்பட்டு பகுதியில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணி நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். பின், வீடு, வீடாகச் சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட்டு, அடையாள அட்டை வழங்கினார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், சுற்றுச்சூழல் அணி பால்ராஜ், சிறுபான்மையினர் அணி தாகீர், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சண்முகம், கவுன்சிலர்கள் மணி, சாந்தராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த்ராஜ், முருகன். ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் சிவானந்தம், ரமேஷ், ஆறுமுகம், கணபதி, பாலமுருகன், ஜானகிராமன், நகர வர்த்தக அணி புகழேந்தி, நகர தகவல் தொழில்நுட்ப அணி சுந்தரவேல், தொண்டரணி மோகன், ரவி, கனகராஜ், ராமகிருஷ்ணன், சிவக்குமார், வசந்தி, ஜனார்த்தனன், காசிநாதன், அபுதாகிர், அழகேசன், செல்வம். தொண்டரணி தயாநிதி, வார்டு செயலாளர்கள் வீரநாதன், மணவாளன், ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் பாவாடை, ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, லதா முருகன், கண்ணன், கார்த்திபன், முருகதாஸ், இம்ரான், கோண்டராமன், தமிழ்வாணன், முருகன், வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ராகவன்பேட்டை, ஆசிரியர் நகர், காகுப்பம், எருமனந்தாங்கல், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை