உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணி எம்.எல்.ஏ., ஆய்வு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணி எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம்: கோலியனுார் கிழக்கு ஒன்றியத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு' புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார். விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கோலியனுார் கிழக்கு ஒன்றிய பகுதியில் தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரை நடந்து வருகிறது. இந்த களப்பணியை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார். பொய்யப்பாக்கம் கிராமத்தில், ஓட்டுச்சாவடி எண்.194, 195, 196 ஆகிய பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதோடு, தலைமை அறிவித்தபடி, ஒரு ஓட்டு சாவடிக்கு 30 சதவீதம் பேரை புதிய உறுப்பினராக சேர்க்கும் இலக்கை அடைய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன். ஊராட்சி தலைவர் சக்கரவர்த்தி, கிளைச் செயலாளர் சசிக்குமார், கிளை நிர்வாகிகள் முருகன், அனந்தராமன், வினோதினி, கருணாகரன், வெங்கடேசன், அர்ஜூனன், புருஷோத்தமன், தங்கராசு, கந்தன், கதிரேசன், ராம்கி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மேல்பாதி ஊராட்சி, செங்காடு, குரும்பன்கோட்டை, இளங்காடு, நரையூர், கல்லப்பட்டு, சாலையாம்பாளையம் ஆகிய கிராமங்களில், புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணியை, எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை