உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோனை கூட்டம் இன்று நடக்கிறது.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை: விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதிகளைச் சேர்ந்த, தேர்தல் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (17ம் தேதி) காலை 9:30 மணிக்கும், திருக்கோவிலுார் மற்றும் வானுார் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த முகவர்களின் கூட்டம் மாலை 3:00 மணிக்கும், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக, தலைமைக் கழக தொகுதி பார்வையாளர்கள் துரை சரவணன் (விழுப்புரம்), கார்த்திகேயன் ( திருக்கோவிலுார்), கருணாநிதி (வானுார்), ஜெயராஜ் (விக்கிரவாண்டி) ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பாக முகவர்கள் தவறால் பங்கேற்கவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை