உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : தமிழகத்திற்கான நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து, கோனுார் ஊராட்சியில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது.காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். விவசாய அணி சுந்தரமூர்த்தி, இளைஞர் அணி குமரன், ரமணன், ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரன், மகளிரணி அமுதா முருகன், சுமதி, மஞ்சு, ஊராட்சி தலைவர்கள் சிவசங்கர், விமலா அறிவழகன், கலைவாணி ரமணன், துணைத் தலைவர் சேதுபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவபூஷ்ணம் முருகன், ஜெயா குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி

விளம்பார் கிராமத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மணிகண்டன், சத்யாமுருகன், முருகேசன், மணிவேல், சதாவெங்கடேஸ்வரன், முரளி, சிங்காரவேல், பரசுராமன், விமலாமனோஜ் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். கிளை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை