உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

செஞ்சி : செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பில் பாரபட்சம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் போக்கை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் ரமேஷ், உதயகுமார், பாபு, அண்ணாமலை, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். செஞ்சி மத்திய ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமைக்கழக பேச்சாளர் குடியரசு, தொகுதி பொறுப்பாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன் ,பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராமசரவணன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி.ஒன்றிய துணை செயலாளர் தாட்சாயணி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி