உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க.,  தெருமுனை பிரசாரம் 

தி.மு.க.,  தெருமுனை பிரசாரம் 

வானூர் : வானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க., ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தது.வானூர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய சேர்மன் உஷா முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பேச்சாளர்கள் வல்லபராசு, ஷிபானா மரியம் பேபி சிறப்புரையாற்றினர். மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன் மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ