விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், காணையில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் நடந்தது.விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., வீடு வீடாகச் சென்று, தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்.அப்போது, தி.மு.க., அரசு செயல்படுத்தப்பட்டு வரும் மகளிருக்கு இலவச பஸ், குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை, காலை சத்துணவு, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை போன்ற திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, ஆதரவு திரட்டினர்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் முருகன், சேர்மன் கலைசெல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம், புனிதா அய்யனார், ஊராட்சி தலைவர் கமலநாதன், மாவட்ட விவசாய அணி சுந்தரமூர்த்தி, கதிரவன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.