உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

மரக்காணம்:' மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் தி.மு.க., வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் மஸ்தான் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் செல்வராஜி அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.மாவட்ட அவைத் தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ், ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி