உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிரணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சிவகாமி வரவேற்றார். துணை அமைப்பாளர்கள் விஜயா, புஷ்பா, பரிதா, லதா முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சேகர், மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் அமலு, மகளிர் தொண்டரணி மாநில இணைச் செயலாளர் தமிழரசி சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், கண்மணி, அமுதா, மாவட்ட கவுன்சிலர்கள் ஏழுமலை, அன்புச்செழியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !