தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பாகர்ஷா வீதியில் நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் வெற்றிவேல் வரவேற்றார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், அவைத் தலைவர் கற்பகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் நந்தா நெடுஞ்செழியன், பாபு, ஜமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரேம், ராஜவேல், கலைவாணன், தேவேந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவமுருகன், புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக், தலைமைக் கழக பேச்சாளர்கள் அன்பரசு, இன்பகுமரன், மாநில ஆதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் தமிழக அரசின் சாதனையை விளக்கிப் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, சந்திரசேகரன், ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கவுன்சிலர்கள் நவநீதம் மணிகண்டன், மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.