மேலும் செய்திகள்
கர்நாடக டிரைவர் லாரி மோதி பலி
29-Aug-2024
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே நடந்த விபத்தில் வேன் டிரைவர் இறந்தார். திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர் மகன் சின்னத்தம்பி, 41; வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் திண்டுக்கல் பகுதியிலிருந்து மைதா லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய வழியாக சென்றார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு விதைப் பண்ணை அருகே சென்றபோது முன்னால் ஓட்டிச் சென்ற வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது சின்னதம்பி ஓட்டிச் சென்ற ஈச்சர் வேன் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற வேன் மீது மோதியது. அதில் டிரைவர் சின்னதம்பி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Aug-2024