உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

திண்டிவனம்; ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேல்சேவூரில் நடந்த ஊர்வலத்திற்கு, ஊராட்சி தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஊர்வலத்தை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சந்தோஷ் துவக்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பேசினார். ஊர்வலத்தின்போது, மாணவர்கள், போதை ஒழிப்பு குறித்து வாசகங்களை ஏந்திய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஊராட்சி துணைத் தலைவர் அன்வர் பாஷா பரிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை