போதை பொருள் விழிப்புணர்வு
வானுார் : திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக எடுத்து வரும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மாணவ, மாணவியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அருளமுதம் நன்றி கூறினார். விழாவில் கல்லுாரி பேராசியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.