உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்; விழுப்புரத்தில் போதை வாலிபர் கைது

ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்; விழுப்புரத்தில் போதை வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரியில் இருந்து டில்லிக்கு நேற்று முன்தினம் இரவு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த 42 வயது பெண், கோவில்பட்டியில் இருந்து தாம்பரம் நோக்கி 'எஸ் 2' கோச்சில் பயணித்தார். இந்த ரயில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த பெண், துாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதே கோச்சில் பயணித்த ஒருவர் குடிபோதையில் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.அதிர்ச்சியடைந்து அந்த பெண் கூச்சலிட்டதையொட்டி, மற்ற பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.ரயில், அதிகாலை 5:40 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்ததும், அந்த நபரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் அந்த நபர், சிவகங்கை மாவட்டம், கீழ்தாலுார் பகுதியைச் சேர்ந்த மணி மகன் கண்ணன், 33; என்பது தெரியவந்தது.இவர், டில்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்வதும், மதுரையில் இருந்து டில்லிக்கு சென்றதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, கண்ணனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி