உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய இருதய கலை அறிவியல் கல்லுாரி பெண் கல்வி முன்னேற்றத்தில் முதன்மை

துாய இருதய கலை அறிவியல் கல்லுாரி பெண் கல்வி முன்னேற்றத்தில் முதன்மை

விழுப்புரம் : பெண் கல்வியே தேசம் போற்றும், முன்னேற்றம் என்ற வார்த்தைகளை உள்ளடக்கி துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. விக்கிரவாண்டி அடுத்த பேரணியில், துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரி, கடந்த 2017 ஆம் ஆண்டு புனித தெரசா கார்மேல் சபை அருட்சகோதரிகளால் துவங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளைக் கடந்தும், பெண் கல்வியே தேசம் போற்றும், முன்னேற்றம் என்ற வார்த்தைகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில், காற்றோட்டமான வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அனைத்து பகுதிகளுக்கும் கல்லுாரி பஸ் வசதி, பாதுகாப்பான விடுதி, சோலார் எனர்ஜி, சுகாதாரமான கேன்டீன் வசதி, பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம், வை பை இணைய வசதி, பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வசதி, திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. இங்கு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., - பி.பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., கணிதவியல், வேதியியல், விலங்கியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய 10 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளது. வரும் கல்வி ஆண்டில் 2025-26ல் பி.எஸ்சி., செயற்கை நுண்ணறிவு, பி.காம்., கணினி பயன்பாடு பாட பிரிவு புதியதாக கொண்டு வரப்பட உள்ளது. மேலும், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி., கணினி அறிவியல், வேதியியல், எம்.காம்., ஆகிய ஐந்து முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளது. இதே போன்று டி.என்.பி.எஸ்.சி., - என்.பி.டி.இ.எல்., - அடிப்படை கணினி, வெப் டிசைனிங், டேலி, ஆரி ஒர்க் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட சான்றிதழ் பாடப்பிரிவுகளும் மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் மாணவிகளுக்கு பெற்றுத் தரப்படுகிறது. புதுமைப் பெண் கல்வி உதவித்தொகை, எஸ்.சி., எஸ்.சி., கல்வி உதவித்தொகை, டிலீமா கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுக்கப்படுகிறது. என்.எஸ்.எஸ்., - ஒய்.ஆர்.சி., - ஏ.ஐ.சி.யு.எப்., - வி.ஐ.பி., - ஆர்.ஆர்.சி., - இ.டி.சி., - இ.சி.ஓ., - எல்.எப்.சி., - சி.சி.சி., - சி.ஆர்.இ., - பைன் ஆர்ட்ஸ் ஆகியவை மாணவிகளின் தனித்திறமைகளை வெளி கொண்டு வருவதற்கும், அவர்களுடைய உதவி மனப்பான்மையை மேம்படுத்துவதற்கும் 11 க்கு மேற்பட்ட கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், சிறந்த பயிற்சி அளித்தும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பரிசுகளை பெற்றுள்ளனர். இக்கல்லுாரியில் நன்கொடை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை