உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மேல்மலையனுாரில் சாலை அமைக்க பூமி பூஜை

 மேல்மலையனுாரில் சாலை அமைக்க பூமி பூஜை

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மேல்மலையனுார் கடைவீதியில் புதிதாக சிமென்ட் சாலை அமைத்திட பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி ரூ.28.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய சாலைக்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் பி.டி.ஓ., ஜெய்சங்கர், ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், துணை தலைவர் புனிதாசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி