உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எடப்பாளையம் அரசு பள்ளி மாணவி மாநில சைக்கிள் போட்டிக்கு தேர்வு

எடப்பாளையம் அரசு பள்ளி மாணவி மாநில சைக்கிள் போட்டிக்கு தேர்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி எடப்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த சாலையோர சைக்கிள் போட்டியில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி முதலிடமும், மாணவன் ஜேஸ்வரன் மூன்றாம் இடமும் வென்றனர். முதலிடம் பெற்ற மாணவி பிரியதர்ஷினி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளார். மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து மூன்றாவது முறையாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார். மாணவி பிரியதர்ஷினி மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு யாராவது ஸ்போர்ட் சைக்கிள் வழங்கினால் போட்டியில் மென்மேலும் சாதிக்கமுடியும் என கூறினார்.மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியை லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவி கற்பகவல்லி, துணைத் தலைவர் கருணாகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநீலன், மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி ,துணைத் தலைவர் சுஜாதா உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதாஸ், கோகுல்ராஜன் பெற்றோர்கள் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை