மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தல்; ஆட்டோ டிரைவர் கைது
10-Sep-2025
விழுப்புரம்: செஞ்சி அருகே ஸ்கூட்டரில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய முதிய வரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று கொங்கரம்பட்டு கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர் மேல்மலையனுார் அருகே கடலாடி கிராமத்தை சேர்ந்த குணசேகர்,62; என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
10-Sep-2025