வெள்ளத்தில் சிக்கி முதியவர் பலி
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே வெள்ளத்தில் சிக்கி முதியவர் இறந்தார்.கண்டமங்கலம் ஒன்றியம் ராம்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 75; பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்று வெள்ளம் கடந்த 2ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊருக்குள் புகுந்தது. இந்த சமயத்தில் வீட்டை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்த நிலையில் இடுப்பளவு வெள்ளத்தில் தப்பிக்க முயன்ற முதியவர் வெங்கடேசன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அவரை கிராம மக்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முதியவர் ் வழியிலேயே இறந்துவிட்டார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.