உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது லாரி மோதியதில் முதியவர் பலி

பைக் மீது லாரி மோதியதில் முதியவர் பலி

மரக்காணம்: மரக்காணம் அருகே, லாரி பைக் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.திண்டிவனத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 60; முருக்கேரியில் லேத்பட்டறை வைத்திருந்தார். இவரது நண்பர் ஆடவல்லிக்கூத்தான் பகுதியை சேர்ந்த வெங்கடசாமி,65; என்பவரை பைக்கில் அமர வைத்து சாத்தமங்கலத்தில் இருந்து முருக்கேரி நோக்கி சென்றார். அப்பொழுது குரூர் ஏரியில் இருந்து கிராவல் மண் ஏற்றி கொண்டு இ.சி.ஆரில், பணிக்காக சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்தார். வெங்கடசாமியை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ.சி.ஆர்., பணிக்காக கிராமப்புற ஏரிகளில் இருந்து கிராவல் மண் எடுத்து செல்லும் டாரஸ் லாரிகளை வெளிமாநிலத்தவர்கள் அதிவேகமாக இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மதியம் 12:00 மணிக்கு முருக்கேரியில் சாலைமறியலில் ஈடுபட 50க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி