விபத்தில் முதியவர் பலி
திண்டிவனம்: பைக் மோதியதில் காய மடைந்த முதியவர் மருத்துவமனையில் இறந்தார். திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பசுமலை, 59; இவர், நேற்று முன்தினம் மதியம் காவேரிப்பாக்கம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, சாரம் பகுதியை சேர்ந்த ராமநாதன், 32; என்பவர் ஓட்டிவந்த பைக் பசுமலை மீது மோதியது. இதில், படுகாய மடைந்த அவரை, அருகி லிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.