உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாரஸ் லாரி மோதி முதியவர் பலி

டாரஸ் லாரி மோதி முதியவர் பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் டாரஸ் லாரி மோதி இறந்தார். தீவனுார் மார்க்கத்தில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று காலை 7:00 மணிக்கு டாரஸ் லாரி சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. லாரியை கீழ்மயிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 43; ஓட்டிச்சென்றார். மன்னம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல், 65; இவர், அதே பகுதி கூட்ரோடு சந்திப்பை சைக்கிளில் கடந்தார். அப்போது, கிருஷ்ணன் ஓட்டி வந்த லாரி அமுல் மீது மோதி விட்டு கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் அமுல், கிருஷ்ணன் இருவரும் காயமடைந்தனர். வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுல் இறந்தார். விபத்து குறித்த போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி