உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

வானூர்; வானூர் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தார். வானுார் அடுத்த பாப்பஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி மல்லிகா, 60; இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சிற்றம்பலம் காலனியில் மணிவண்ணன் என்பவரது வீட்டின் எதிரில் நடந்த உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தார்.மழை பெய்து கொண்டிருந்த போது, விழா மேடையில் இருந்த மின்சார ஒயர் மீது மல்லிகா தெரியாமல் கை வைத்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை