தனியார் பஸ் மோதி மின் கம்பம் சேதம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், தனியார் பஸ் மோதியதில், மின் கம்பம் சேதமடைந்தது.புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை 2:30 மணியளவில் தனியார் பஸ், விழுப்புரத்திற்கு வந்தது. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் செல்லும் வழியில் அதிவேகமாக வந்த பஸ் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்துவதற்காக வலது புறம் பஸ்சை திருப்பினார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை தடுப்பில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில், மின் கம்பம் வளைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.சம்பவம் குறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், விழுப்புரம் நகராட்சி பணியாளர்கள், சேதமடைந்த மின் கம்பத்தை பொக்லைன் உதவியுடன், அப்புறப்படுத்தினர்.