மின்துறை ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் :தமிழ்நாடு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பு செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் கன்னியப்பன் வரவேற்றார்.மாநில தலைவர் பழனி, துணைத் தலைவர் முருகன், கடலுார் திட்ட செயலாளர் முருகன், சட்டநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.