உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டம்

விழுப்புரம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.விழுப்புரம் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு சங்க திட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், சக்திவேல், ராமலிங்கம், வளர்மதி முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் புருஷோத்தமன், இணைச் செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில், மின் துறையை பொதுத்துறையாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அப்போது, சி.ஐ.டி.யு.,மாவட்ட செயலாளர் மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அம்பிகாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை