மேலும் செய்திகள்
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
19-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர் வோர் குறைகேட்பு கூட்டம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டங்கள், மின் துறை செயற்பொறியாளர் அலுவலகங்களில், செவ்வாய் கிழமகைளில் பகல் 11.00 மணிக்கு துவங்கும்.அதன்படி வரும் டிசம்பர் 3ம் தேதி விழுப்புரத்திலும், 10ம் தேதி கண்டமங்கலத்திலும், 17ம் தேதி செஞ்சியிலும், 24ம் தேதி திண்டிவனமத்திலும் கூட்டம் நடக்கிறது.அந்தந்த பகுதி மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் மின்துறை சார்ந்த குறைகளை, மின் வாரிய மேற் பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த வேலை நாளில் கூட்டம் நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
19-Nov-2024