சாலையின் நடுவில் மின்கம்பம்
திண்டிவனம் : தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திண்டிவனம் நகராட்சி வசந்தபுரம் பகுதியில் கங்கா நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் நடுவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த பகுதி வசந்தபுரம், கங்கா நகர், பெலாக்குப்பம் ரோடு, சாய்லட்சுமி நகர் செல்லும் வழியாக உள்ளது. சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் இரவு நேரத்தில் வருபவர்கள், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி வருபவர்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. மின்துறை அதிகாரிகள் தலையிட்டு, மின்கம்பத்தை சாலையோரம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.