மின் ஊழியர்கள் தர்ணா
விழுப்புரம் : மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு விழுப்புரம் மண்டலம் சார்பில் தர்ணா போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது.போராட்டத்திற்கு, கிளைச் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தேசிங்கு முன்னிலை வகித்தார். சிறப்பு தலைவர்கள் சிவசங்கரன், ரவிச்சந்திரன், கோட்ட செயலாளர் அருள், திட்ட பொருளாளர் ஜீவா முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் அம்பிகாபதி, மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு புருஷோத்தமன் வாழ்த்தி பேசினார்.போராட்டத்தில், மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியமே தினக்கூலியை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. திட்ட பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.