மேலும் செய்திகள்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
31-Jul-2025
விழுப்புரம்: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செஞ்சி கோட்ட செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் அசோக்குமார், ஏழுமலை, பழனி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அம்பிகாபதி, திட்ட தலைவர் சேகர், செயலாளர் அருள், துணைத் தலைவர் புருஷோத்தமன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மின் நுகர்வோர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயப்படுத்திட வகை செய்யும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோட்ட தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
31-Jul-2025