மேலும் செய்திகள்
கண்டமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
05-Sep-2024
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த வி.அகரம் கிராமத்தில் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் குலை நோயால் பாதிக்கப்பட்ட வயலில் வேளாண் விஞ்ஞானி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் செந்தமிழ் பாதிக்கப்பட்ட நெல் வயலை பார்வையிட்டு, ஆரம்ப அறிகுறி, தாக்குதல் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை வழங்கினார்.ஆனைக்கொம்பன் பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் வெங்காய இலைகள் போன்று காணப்படும். கதிர்கள் தோன்றாது இதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து இடவேண்டும். இந்த நோயை கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டிய மருந்துகளை பரிந்துரை செய்தார்.ஆய்வின்போது கண்டமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுமதி, ஊராட்சி தலைவர் முருகன், வேளாண் அலுவலர் விஜய், துணை வேளாண் அலுவலர் சுப்புராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
05-Sep-2024