வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: த.வெ.க., பிரசாரம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி த.வெ.க., சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த பிரசாரத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கி, தொகுதி முழுதும் பிரசாரம் செய்வதற்கு 6 ஆட்டோக்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினார்.மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத் தலைவர் வடிவேல், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிருத்திவிராஜ், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர்கள் காமராஜ், ஜான் பீட்டர், பொருளாளர்கள் ரமேஷ், முத்து, நகர தலைவர் சிவக்குமார், தொகுதி பொறுப்பாளர் நவீன் ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.