மருத்துவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்திய மருத்துவ சங்கம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.மருத்துவமனை ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மாநில நர்சிங் ஹோம் போர்டு பொருளாளர் திருமாவளவன், மகப்பேறுத்துறை தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட தலைவர் தங்கராஜ் ,செயலாளர் சவுந்தர்ராஜன், கல்லூரி துறை பேராசிரியர்கள் மாணவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.