உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா போட்டி இ.எஸ்., பாலிடெக்னிக் முதலிடம்

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா போட்டி இ.எஸ்., பாலிடெக்னிக் முதலிடம்

விழுப்புரம்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த போட்டிகளில் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடத்தை பிடித்து சாதித்தது.திருவள்ளுவரின் 133 அடி திருவுருவ சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழக அரசின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பல்வேறு போட்டிகள் நடந்தது.இதில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திரைச்சுருள், குறும்படம், ஓவிய போட்டிகளில் விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று முதலாவது, இரண்டாவது இடத்தை பிடித்து வென்றனர்.வெற்றி பெற்றோருக்கு உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன், ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கினார்.வென்ற மாணவர்களை இ.எஸ்., கல்விக்குழுமம் தாளாளர் செந்தில்குமார் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் தினேஷ், வேதியியல் துறை விரிவுரையாளர் முருகன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ