உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு துறையில் பதவி உயர்வுக்கான தேர்வுகள் இன்று துவக்கம்

அரசு துறையில் பதவி உயர்வுக்கான தேர்வுகள் இன்று துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அரசு துறையினருக்கான தேர்வுகள் இன்று 20ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், டிசம்பர்-2024ம் ஆண்டுக்கான அரசு துறையினயில் பதவி உயர்வுக்கான தேர்வுகள் இன்று 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.இதில் இன்று கணினி வழித்தேர்வும், 26 முதல் 29ம் தேதி வரை விரிந்துரைக் கும் வகையிலான தேர்வும் நடைபெற உள்ளது.மாவட்டத்தில் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கும் கணினி வழித்தேர்வில் 1,855 பேர் 6 தேர்வுக் கூடங்களிலும், 26 முதல் 29 வரை நடக்கும் விரிந்துரைக்கும் தேர்வில் 1,615 தேர்வர்களுக்கு ஒரு தேர்வு கூடத்திலும் நடைபெற உள்ளது.திண்டிவனம் அரசு பொறியியல் கல்லுாரி, தட்சசீலா பல்கலை கல்லுாரி, மயிலம் பொறியியல் கல்லுாரி செஞ்சி ரங்கபூபதி பொறியியல் கல்லுாரி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி, விக்கிர வாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி ஆகிய மையங்களில் தேர்வு நடக்கிறது.இந்த தேர்வுகளுக்கான ஆய்வு அலுவலர்கள் மற்றும் நடமாடும் குழு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருகை புரிந்து, தேர்வில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ