உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண் சிகிச்சை முகாம் 

கண் சிகிச்சை முகாம் 

திண்டிவனம்: திண்டிவனத்தில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை, ஜி.டி.தங்க மாளிகை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமிற்கு ேஹாஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுகுமார் வரவேற்றார். திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 265 பேருக்கு மருத்துவ குழுவி னர் பரிசோதனை செய்தனர்.முகாமில் மாவட்ட தலைவர்கள் சஞ்சீவி, சித்தார்த்தன், ஐங்கரன், சிவக்குமார் ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், முகாம் ஒருங்கிணைப்பாளர் சந்தானம், ஜி.டி.தங்க மாளிகை உரிமையாளர்கள் தரம்சந்த், கவுதம்சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ