உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் கோஷ்டி மோதல் திண்டிவனத்தில் வெட்ட வெளிச்சமானது

தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் கோஷ்டி மோதல் திண்டிவனத்தில் வெட்ட வெளிச்சமானது

தி ண்டிவனம் நகராட்சியில் ஆளுங்கட்சி நிர்மலா நகர்மன்ற தலைவராக உள்ளார். இவரது கணவர் ரவிச்சந்திரன் கவுன்சிலர். நகராட்சியில் உள்ள 33 கவுன்சிலர்களில் தி.மு.க.வினர் 26 பேர் உள்ளனர். நகராட்சி கமிஷனர் அறையில், தி.மு.க.,கவுன்சிலர் ரம்யா காலில் நகராட்சி ஊழியர் முனியப்பன் விழுந்த விவகாரம், தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சியான கம்யூ., வி.சி. கட்சிகள் கூட ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த விவகாரத்தில் நகரமன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யா, தி.மு.க., பிரமுகர்கள் பிர்லாசெல்வம், காமராஜ், கவுன்சிலர் ரம்யாவின் கணவர் ராஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள் 4 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தாலும் முனியப்பனுக்கு ஆதரவாக சில தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்ந்து, நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். மற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் ஒதுங்கி கொண்டனர். இதற்கு காரணம் நகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் நிலவும் உச்ச கட்ட கோஷ்டி மோதல். நகர்மன்ற தலைவர் ஆதரவு, மாவட்ட செயலாளர் ஆதரவு, 5 பேர் கொண்ட கவுன்சிலர்கள் தனி அணி என பல்வேறு அணியாக கவுன்சிலர்கள் பிரிந்துள்ளனர். இவ்விவகாரத்தில் சிக்கிய கவுன்சிலர் ரம்யாவின் கணவர் ராஜா மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை அறிந்த தி.மு.க., மண்டல பொறுப்பாளரான அமைச்சர் பன்னீர்செல்வமும் ஒதுங்கி கொண்டார். தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் இருக்கும் கோஷ்டி மோதலால் திண்டிவனம் நகராட்சியில் ஆளும் கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்வதாக கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ