உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சவுக்கு விலை வீழ்ச்சி: கலெக்டரிடம் மனு

சவுக்கு விலை வீழ்ச்சி: கலெக்டரிடம் மனு

விழுப்புரம், ; சவுக்கு விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஆயிரம் ஏக்கர் சவுக்கு பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென சவுக்கின் விலை குறைந்துள்ளது. காரணம் தாய்லாந்தில் இருந்து 40 ஆயிரம் டன்னை, கடந்த வாரங்களில் காகித ஆலைகள் இறக்குமதி செய்துள்ளன. இதனால், இங்கிருந்து செல்லும் சவுக்கு கட்டைகள் உடனே இறக்காமல் ஒருவாரம் தாமதம் செய்து இறக்குகின்றனர். இதையொட்டி, 10 டன் காய்ச்சலுக்கு 1 டன் குறைகிறது. இதையடுத்து, கணிசமான அளவு விலை குறைகிறது. இதை தடுக்க முத்தரப்பு கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை