மேலும் செய்திகள்
பீஹார் பெயின்டர் விபரீத முடிவு
10-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டை அருகே பைக் மோதி விவசாயி இறந்தார். கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 47; விவசாயி. இவர், கடந்த 7ம் தேதி இரவு 7:00 மணியளவில் தனது நிலத்தில் இருந்து நடந்து வீடு திரும்பினார். கிளியூர் ஒயின்ஷாப் அருகே சென்ற போது பின்னால் வந்த பைக் மோதியதில், கிருஷ்ணமூர்த்தி படுகாய மடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் காலை இறந்தார். புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.
10-Sep-2025