உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 26 வருவாய் கிராமங்களில் இன்று உழவரைத்தேடி திட்டம் துவக்கம்

26 வருவாய் கிராமங்களில் இன்று உழவரைத்தேடி திட்டம் துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 26 வருவாய் கிராமங்களில் இன்று உழவரைத்தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் துவங்கப்படுகிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;உழவரைத்தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் தமிழக முதல்வரால் இன்று 29ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் அன்னியூர், பொய்யப்பாக்கம், வாதனுார், கட்டளை, அரசூர், வேம்பி, மயிலம், அருகாவூர், பொம்பூர், நொளம்பூர், ஆலம்பூண்டி, அண்ணாகிராமம், சித்தாதுார், கல்பட்டு, மரகதபுரம், ஆழியூர், நகர், பெரியசெவலை, அய்யூர் அகரம், ரெட்டணை, கல்லடிக்குப்பம், தைலாபுரம், செம்பாக்கம், வரிக்கல், அவலுார்பேட்டை, தணிகலாம்பட்டு ஆகிய 26 வருவாய் கிராமங்களில் காணொளி வாயிலாக துவக்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டபடி, ஒவ்வொரு மாதமும் 2 வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, விதை மற்றும் உயிர்மச்சான்று துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, பட்டுவளர்ப்புத்துறை, கூட்டுறவு சங்கம், வேளாண் அறிவியல் மையம் மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கொண்ட குழுவானது வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தலைமையில் 928 வருவாய் கிராமங்களிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைப்பது, பயனாளிகளை தேர்வு செய்வது மற்றும் களப்பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை