உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை

 காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. அப்பகுதியில் உள்ள ஏரியில் காட்டுப்பன்றி அதிகளவில் வசித்து வருவதால் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்துவதோடு அடியோடு தோன்றி நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் இரவு நேரங்களில் வெடி வெடிப்பது ஸ்பீக்கர் வைத்து ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அதையும் மீறி பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு கவலை அடைந்துள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்