உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை

மானியத்தில் தரமான விதைகள் விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான, தரமான விதைகளை வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில், பாம்பு கடித்து விவசாயிகள் இறந்தால், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; நடப்பு பருவத்திற்கு வேளாண் துறை சார்பில் விதை நெல், மானியத்தில் வழங்க வேண்டும்; தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து காய்கறி விதைகளையும் தரமானதாகவும், மானியத்திலும் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து பேசிய கலெக்டர் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ